அழகுசாதனப் பொருட்களை கொள்ளையடித்த தம்பதியினர்
அலுபோமுல்ல அங்காடியில் இருந்து சுமார் 15,000 ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை கொள்ளையடிகைப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குருச சந்தி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியிலே இத் தம்பதியினர் கொள்ளையடித்துள்ளதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பல்பொருள் அங்காடிக்கு வந்து கைப் பையில் பல பொருட்களை திருடியுள்ளனர்.
அதோடு அவர்கள் ஒரே ஒரு பொருளுக்கு மட்டும் பணம் செலுத்தியதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்து திருட்டில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
கடைக்கு முன்பாக நின்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகநபர்கள் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலும் பொருட்களைத் திருடியதற்காக புலத்சிங்கல பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தம்பதிகள் அவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களான தம்பதியினர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.