1.6 பில்லியன் ரூபாய் நிதி மோசடி; இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதி
நிதி மோசடியில் ஈடுபட்டு படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட தம்ப்[அதி நங்கிருந்து நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்ட நிலையில், கைதான தம்பதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அவர்கள் நேற்று (27) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதி
குறித்த தம்பதியினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று முன் தினம்(26) கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், சந்தேகநபர்களின் மகன் அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கொழும்பில் வசித்து வந்த தம்பதிகள் 4 வருடங்களுக்கு முன்னர் 1.6 பில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.