வீடொன்றில் இளம் தம்பதி செயலால் அதிர்ச்சியில் பொலிஸார்!
மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிஹந்தெனியவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று நேற்று (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திக்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தோட்டாக்கள், போதைப்பொருட்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த கணவரும் மற்றும் 29 வயதுடைய மனைவியும் ஆவார்.
கணவனிடமிருந்து தோட்டாக்கள், 01 மெகசின் மற்றும் 02 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மனைவியிடமிருந்து 01 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.