மூளை மரணித்துள்ளவர்களால் நாடு நிர்வகிக்கப்படுகின்றது ; சந்திம வீரக்கொடி
மூளை பகுதியளவில் மரணித்துள்ள அதிகாரிகளினால் நாடு நிர்வகிக்கப்பட்டால் ஏற்படும் சவால்களை நாட்டு மக்கள் எதிர்க்கொள்ள நேரிடும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் விசேட வைத்திய நிபுணர்களின் கருத்துக்களுக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்க வேண்டும் என்றும், இல்லாவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
எந்த அடிப்படையில் ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டு அரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு அழைத்துள்ளார். அரச சேவையாளர்கள் அனைவரும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளமை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மூளை பகுதியவில் மரணித்துள்ள அதிகாரிகளினால் நாடு நிர்வகிக்கப்பட்டால் இனி வரும் காலங்களில் நாட்டு மக்கள் பல சவால்களை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
கொவிட் தொற்றாளர்கள் குறைந்தளவு அடையாளப்படுத்தப்பட்ட போது நாடு முழுமையாக முடக்கப்பட்டு சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் பின்பற்றப்பட்டன.
இதன் காரணமாக அப்போது நெருக்கடிகளை சிறந்த முறையில் முகாமைத்துவ செய்ய முடிந்தது. ஆனால் தற்போது நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை குறைந்தபட்சம் இரண்டு வார காலத்திற்காவது முடக்க வேண்டும் என விசேட வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அவரிகளின் இக்கோரிக்கைக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்க வேண்டும் என்றும், இல்லாவிடின் நாடு பாரிய விளைவுகளை எதிர்க் கொள்ள நேரிடும் எனவும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். .