2022இல் கொரோனா தோற்கடிக்கப்படும்!
2022 இல் கொரோனா தொற்றுநோய் தோற்கடிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் (Dr. Tetros Adanom) தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் (Dr. Tetros Adanom)வெளியிட்டுள்ள புத்தாண்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறுகிய தேசியவாதம் மற்றும் தடுப்பூசி பதுக்கலுக்கு எதிராக எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
சீனாவில் அறியப்படாத நிமோனியா பாதிப்பு குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
அதேவேளை உலகளாவிய கொரோனா தொற்று 287 மில்லியனாக உள்ளதுடன், கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.