யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 பேரை பலியெடுத்த கொரோனா!
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாங்குளத்தை சேர்ந்த 79 வயதான ஒருவர், கச்சோி- நல்லுார் வீதியை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர், யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட 82 வயதான முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நெல்லியடி கரணவாய் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவர் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் இயற்றாலை பகுதியை சேர்ந்த 86 வயதான பெண் ஒருவரும், நுணாவில் பகுதியை சேர்ந்த 90 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.