யாழ் மாவட்டத்தில் தீவிரமடையும் கொரோனா; 24 மணி நேரத்தில் ஐவர் பலி
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு வரையான 24 மணிநேரத்தில் மேலும் 5 பேர் கொவிட் - 19 நோயினால் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக மூவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தனர்.
அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
மேலும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முன்னெ டுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை பண்ணைக் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இளைஞருக் கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.