ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் 'கிடுகிடு'வென உயரும் கொரோனா தொற்று!
ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை கிடுகிடு வென அதிகரிப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நேற்றையதினம் 22,775 பேருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்ட நிலையில் இன்று 27,553 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,48,61,579 லிருந்து 3,48,89, 132 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் ஒரேநாளில் கொரோனாவுக்கு 284 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 4,81,486 லிருந்து 4,81,770 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை இந்தியாவில் இதுவரை 1,525 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பதிவான மாநிலங்களில், மராட்டியம் - 460, டெல்லி -351, குஜராத் - 136, கேரளா -109 ராஜஸ்தான் -69, தெலுங்கானா - 67, கர்நாடகா -64, அரியானா -63, பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.