வவுனியாவில் கொரோனா தொற்றால் இன்றையதினம் 4 பேர் மரணம்!
வவுனியாவில் இன்றையதினம் நான்கு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர்கள் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நிலையில் இன்று மரணமடைந்தனர். அவர்களில் ஒருவர் நேற்றையதினம் வீட்டில் மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியாகியிருந்தது.
அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோணிக்கல், மகாறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இன்று மரணமடைந்துள்ளனர்