யாழ்.கொடிகாமம் பகுதியில் 8 பேருக்கு கொரோனா
யாழ்.கொடிகாமம் பகுதியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.
கொடிகாமம் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக எழுமாற்று பரிசோதனைகள் நடத்தப்படுகின்றது.
இதன்படி நேற்றய தினம் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் தொற்று அறிகுறியுடன் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் கொடிகாமம் சந்தை வியாபாரி என கூறப்படுகின்றது. இதேவேளை இன்றைய தினம் 11 அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் கொடிகாமம் மக்கள் வங்கி பணியாளர் எனவும், மற்றயவர் கச்சாய் பகுதியை சேர்ந்த முதியவர் எனவும் சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.
அத்துடன் மேலும் 84 போிடம் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அதனுள் சந்தை வர்த்தகர்களும் அடங்குவதாகவும் அதன் முடிவுகள் வெளியானவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.