ஹர்ஷ டி. சில்வா நியமனத்தால் வெடித்த சர்ச்சை!
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி. சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது எனினும் அது விதிகளை மீறியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ நியமனம் அது நிலையியற் கட்டளைகளை மீறுவதால் இந்தச் செயல் ஒரு தவறான முன்னுதாரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கட்டளைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்
கலாநிதி ஹர்ஷ டி. சில்வாவின் நியமனத்தை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் அவர் நிலையியல் கட்டளைகளை மீறி நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்ட நாங்கள் விரும்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹர்ஷவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய பங்கிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஆனால் இவ்விடயத்தில் ஜனாதிபதியின் செய்த தலையீட்டை சட்டபூர்வமானதாக்க நிலையியல் கட்டளைகள் இப்போது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும் விரும்புகிறோம் என்றார்.
அதேசமயம் இந்த முழு விடயமும், எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் சென்று தான் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.