முகம் சுழிக்க வைக்கும் சர்ச்சைக்குரிய காணொளி; சிக்கிய காதல் ஜோடிகள்!
இரத்தினபுரி – பலாங்கொடை பஹந்துடாவ எல்ல நீர்வீழ்ச்சியில் காதல் ஜோடிகளின் காணொளியை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, அவர்களின் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அங்கு அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளமை குறிப்பித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க உறுதிப்படுத்தினார்.
அங்குச் சென்றிருந்த காதல் ஜோடியொன்றின் காட்சிகளே வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ளது. குறித்த காணொளியில் தோன்றிய பெண்ணை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதேவேளை அவர் இதற்கு முன்னரும் இதுபோல காணொளியில் பங்கேற்றியிருப்பதாகவும், அவர் அழகுசார்ந்த கலையில் ஈடுபட்டிருப்பவர் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியின் வளாகத்தில் காணொளியால் சர்ச்சையில் சிக்கிய ஜோடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த ஜோடிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைதாகியிருக்கின்றனர்.
குறித்த ஆண் சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுநபர் என்பதுடன், பெண் காலி – எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
https://jvpnews.com/article/the-act-of-turning-the-face-of-a-young-couple-1630496565