சர்ச்சைக்குரிய சீன ஆய்வு கப்பல் மீண்டும் இந்து சமுத்திரத்தில்
இலங்கைக்கு வருகை தந்த சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வு கப்பலான, யுவான் வாங் 5, சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்து சமுத்திர கடற்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பிராந்திய கண்காணிப்பினை தீவிரப்படுத்திவரும் நிலையில், இந்த கப்பல் மீண்டும் தோன்றியுள்ளது.
சீன மக்கள் விடுதலைப் படை கடற்படையால் இயக்கப்படும் அதிநவீன செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, கடந்த 18 ஆம் ஆம் திகதியன்று இந்தோனேசியா அருகே இறுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 முதல் 25 ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு ஹைப்பர்சோனிக் நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் வங்காள விரிகுடாவின் வான்வெளியைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விமானப்படையினருக்கான அறிவிப்பொன்றையும் இந்தியா வெளியிட்டுள்ளது.
நிலையில், இது ஏவுகணை சோதனை குறித்து மேலும் ஊகங்களைத் தூண்டியுள்ளது.
யுவான் வாங் 5,கப்பலானது விமானம் அல்லது விண்வெளிசுற்றுப்பாதையில் உள்ள பொருட்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட ரேடார் அமைப்புகளைக் கொண்டுள்ளதுடன், 400 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது.