பிக் பாஸ் வீட்டில் பாவனியை செருப்பால் அடிப்பேன் என்று கூறிய போட்டியாளர்....கொந்தளித்த ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 5 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் இந்த வீட்டில் சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் போன்ற ஐந்து நாணயங்கள் பெட்டியில் வைக்கப்படும். அதை போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாமல் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் நபர் அதை பிக்பாஸுக்கு அறிவிக்க வேண்டும். இது தான் டாஸ்க். இதில் ஐக்கி, அபிஷேக், மதுமிதா ஆகியோர் நனையங்களி எடுத்து பதுக்கி வைத்துவிட்டனர்.
இந்த நிலையில் பாவனியும் நாணயத்தை எடுத்து மறைக்க முற்பட்டபோது அதனை அபினய் பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பாவனி யாரிடமும் கூறாதே என சொல்லியுள்ளார். அதற்கு அபினய் செருப்பால அடிப்பேன் என கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்த பவானி பேச்சின்றி அமர்ந்திருந்தார். அவருடன் மதுமிதாவும் இருந்தார்.
இதனால் இதுகுறித்து இந்த வர இறுதியில் விவாதிக்க வேண்டுமென ரசிகர்கள் கூறி வருகின்றனர்.