அநுர அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி ; அம்பலப்படுத்திய சாணக்கியன்
அனுர அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், அம்பலப்படுத்தியுள்ளார்.
முன்னாள் அரசாங்க அமைச்சர் உட்பட சில முக்கிய முன்னாள் அரச அதிகாரிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதி குறித்து இரா.சாணக்கியன் அம்பலப்படுத்தியுள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட ராஜபக்சக்கள் ஆதரவு காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு முக்கிய முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடத்தில் நடந்த கூட்டம் குறித்து அரசாங்கத்திற்குத் தெரியுமா? என்றும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவப் புலனாய்வு முன்னாள் பணிப்பாளர் பிரிகேடியர் (ஓய்வு பெற்ற) சூல ரத்னசிறி கொடித்துவக்கு மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வா ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் அவரால் அதில் கலந்து கொள்ள முடியாததால், அவரது நெருங்கிய கூட்டாளியான இனியபாரதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார் என்றும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
"இனியபாரதி கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தங்கியிருந்தார். சுதா என்ற நபரால் அவர் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இனியபாரதி கொலைகள் உட்பட பல முந்தைய குற்றங்களில் ஈடுபட்டதாக அறியப்பட்ட நபர். பிள்ளையான் பற்றிய விவரங்களும் உள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நடைபெற்ற சதியினை ஒத்ததாக தற்போதைய கூட்டம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.