மே தினத்தால் மொட்டுக்குள் குழப்பம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பஸில் ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார். கட்சியின் மாவட்ட தலைவர்களும், ராஜபக்சக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் பிரமுகர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
உள்ளாட்சிசபைத் தேர்தல், மேதினக் கூட்டம் உள்ளாட்சிசபைத் தேர்தல், மேதினக் கூட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.
பஸில் மறுப்பு
இதன்போது இம்முறை மே தினக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியபோது சில அரசியல் பிரமுகர்களும் அதனை ஆமோத்தித்ததாகவும் கூறப்படுகின்றது.
எனினும், பஸில் ராஜபக்ச பச்சைக்கொடி காட்ட மறுத்துள்ளார்.
அதோடு தொகுதி மட்டத்தில் கூட்டங்களை நடத்தினால் போதும், பிரமாண்ட கூட்டங்கள் அவசியமில்லை என்றும் மக்களிடமும் பணம் இல்லை என பஸில் கூறியதால் மஹிந்தானந்த கடுப்பாகி பின்னர் எதனையும் முன்வைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.