மாறி வழங்கப்பட்ட இரண்டு சடலங்களால் ஏற்பட்ட குழப்பம்
பாணந்துறை போதனா வைத்தியசாலை யின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றின் காரணமாக முஸ்லிம் பெண் ஒருவரும், சிங்களப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 89 மற்றும் 93 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த முஸ்லிம் பெண்ணின் ஜனாஸாவிற்கு பதிலாக பாணந்துறை பகுதியை சேர்ந்த 93 வயதுடைய சிங்கள பெண்ணின் பிரேதம் முஸ்லிம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த இதற்கமைய, குறித்த சிங்கள பெண்ணின் பிரேதம் அன்றைய தினம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாணந்துறை வீரசிங்க மாவத்தை சேர்ந்த 93 வயதுடைய சிங்களப் பெண்ணின் இறுதிக் கிரியைகளுக்காக அவரது உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு சென்று குறித்த சரீரம் தொடர்பில் வினவியிருந்தனர்.