மனைவியுடன் மோதல்; குடும்பஸ்தர் குத்திக்கொலை
கிரிபத்கொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதிலியாகுடுவ பிரதேசத்திலேயே கூரிய ஆயுதத்தால் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்த நபர் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மனைவியுடன் முரண்பாடு
சம்பவத்தில் உயிரிழந்தவர் 51 வயதுடைய ஹுணுப்பிட்டிய, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
இந்நிலையில் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படும் 33 வயதான நபர் ஆயுதத்துடன் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளார்கள்.