பிரபல நாடொன்றில் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி!
சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் சினோபார்ம், சினோவாக் என்னும் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் சீனாவில் இதுவரை 223 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்தாண்டு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் சூழலில் அங்கு மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக , பல்வேறு இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதோடு , குழந்தைகளுக்கும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹூபெய், புஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.