எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க கலந்துரையாடல்
எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நாளை மறுதினம் கலந்துரையாடப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் பதிவாகியுள்ளன. எரிவாயு, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. போதியளவு பொருட்கள் வழங்கப்படாமையால் சந்தை பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் லசந்த அழகியவண்ண, எரிவாயு தொடர்பான வெடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்தார்.