இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இன்று தனது 101 வயதில் காலமானார்.
முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தத அவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டம்
கடந்த பல நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், பட்டியலின சமூகத்தினர் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.
வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல்வாதிகள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.