இலங்கையில் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம்; சினத்தை ஏற்படுத்திய காணொளி!
இலங்கையில் பேருந்து ஒன்றில் அருகில் அமர்திருந்த பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தகாத முறையில் அங்க சேட்டை விட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பலரும் அதிருப்தியையும் சினத்தையும் வெளியிட்டுள்ளனர்.

முகம் சுழிக்கும் அங்க சேட்டை
பெண்கள் வேலை நிமித்தமோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ பேருந்துகளில் பயணம் செல்கையில் சிலர் இவ்வாறு அங்க சேட்டையில் ஈடுபடுவது, முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வது வேதனைக்குரிய ஒன்றாகும்.
நாளை தமது பிள்ளைகளுக்கோ , சகோதரிகளுக்கோ அல்லது அவரது மனைவிக்குமே கூட இதுபோன்ற சம்பவம் நிகழலாம்.
இவ்வாறு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் ஒரு சில ஆண்களால் ஒட்டுமொத்த ஆண்களையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படும்.
எனவே பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர்.