கொழும்பில் டெங்கு நோயாளர்கள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை தகவல்!
கொழும்பு மாநகர எல்லையில் 3,465 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் (CMC) பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக வைத்தியர் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய 3,465 டெங்கு நோயாளர்களில் 80% டெங்கு நோயாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
"டெங்கு ஆய்வுகளில் வீடுகள் தொடர்பான 7.1% இனப்பெருக்கம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 60% அரச நிறுவனங்களிலிருந்தும் 80% கட்டுமானப் பணியிடங்களிலிருந்தும் பதிவாகியுள்ளன," என்று அவர் கூறினார்.
கணக்கெடுப்பின் அடிப்படியில், நோய் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக டாக்டர் விஜயமுனி மேலும் தெரிவித்தார்.