கொழும்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர் எங்களுக்கு வேண்டாம்; புத்தளத்தில் போராட்டம்
கொழும்பில் உயிரிழந்த அம்ஷிகா எனும் மாணவியின் உயிரிழப்புடன் தொடர்பான ஆசிரியர் தமக்கு வேண்டாம் என புத்தளம் ஸாஹிறா கல்லூரி முன்பாகப் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நியாயமான இந்தப் பெற்றோரின் போராட்டம் போன்று இந்த காமுகன் எந்த பாடசாலைக்கும் வேண்டாம் எனவும் இவனுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பேற்ரோர் கூறுகின்றனர்.
நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்போம்
இவ்வாறான காமுகனைப் பாதுகாக்க நினைப்போருக்கு எதிராகவும் தொடர்ந்தும் நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் புத்தளம் ஸாஹிறா கல்லூரி பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தவறு செய்து தண்டிக்கப்படும் அரச அதிகாரிகளின் சிறைச்சாலை அல்ல புத்தளம் என்றும் பெற்றோர்கள் கைகளில் பதாதைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.