போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் பாகிஸ்தான்!
இந்தியாவுடனான எல்லையில் நிகழும் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டுப் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடைய தலைவர்களுடன் பாகிஸ்தானின் வெளியுறத்ததுறை அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பிரதமர் இந்தியாவுடன் பேசி தாக்குதலை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்
அதோடு சர்வதேச நாடுகளுடைய தலைவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாகிஸ்தானுடைய பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் செயலில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது.
அதற்குத் தகுந்த உதவிகளைச் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும். இந்தியாவுடனான எல்லை பிரச்சினை விவகாரத்தில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலகளை மேற்ஒண்டு வருவகின்றம் உலக நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.