கொழும்பு வீதியில் பொலிஸாரின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள்!
கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதியில் பொலிஸாரால் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக அப்பகுதியில் வந்த அம்பியூலன்ஸ் வண்டிக்கு அதிகாரிகள் இடம் கொடுக்காததால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் ஆத்திரமடைந்ததை அடுத்து அம்பியூலன்ஸ் வண்டி திரும்பிச் சென்றுள்ளது.
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிளை ஆர்ப்பாட்டப் பேரணிகள் காலி முகத்திடலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
இதனைத் தடுக்கும் முன் ஏற்பாடாக காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் வீதித் தடைகள் போட்டு பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கும் செல்வதற்கு இடம் கொடாததால் அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் சற்று முன்னர் முரண்பாடான நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.