இலங்கையில் மூன்று முக்கிய மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (15-09-2023) மாலை வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மணித்தியாலயத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.