கொழும்பு பொலிஸில் சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி, வெடிமருந்துகள் கைப்பற்றல்
பேலியகொட பொலிஸ் நிலையத்தில், தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற சந்தேக நபர் ஒருவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐஸ் போதைப்பொருளுடன் கடந்த 11ஆம் திகதி களனி பொலிஸாரினால், ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குறித்த சந்தேகநபர் களனிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட பகுதியில், கடந்த மே 27ஆம் திகதி துப்பாக்கி முனையில் ஒருவரைக் கடத்தி பணம் மற்றும் சொத்துக்களைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை மேலும் விசாரணைக்குட்படுத்தியதில், பேலியகொட, களனி பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவால்வர் ரக துப்பாக்கி மற்றும் 03 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆயுதம் மற்றும் வெடிமருந்துகள் களனி என்பனவும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் தொடர்பில், பேலியகொட மற்றும் களனி பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.