கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவல நிலை
நாட்டின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பணிப்பாளருக்கு பதவி உயர்வு
அதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்னாள் பணிப்பாளர் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்று சுகாதார அமைச்சுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரதி பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். எனினும் நிரந்தர பணிப்பாளர் இன்மையால் வைத்தியசாலையின் சில பிரிவுகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுமார் 1,500 வைத்தியர்களும் 200 வைத்திய நிபுணர்களும் காணப்படுவதோடு, மொத்தமாக 25,000 ஊழியர்கள் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.