கொழும்பில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு! வைத்தியசாலையில் ஒருவர்
மட்டக்குளியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்தை பகுதியில் நேற்று இரவு (28-08-2022) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் போதைப்பொருள் தொடர்பான திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.