கொழும்பில் பாரிய தீ விபத்து : முற்றாக எரிந்த வீடு!
மாவத்தையில் உள்ள வீடு ஒன்று தீயினால் எரிந்து முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று (31-12-2021) காலை வத்தளை, ஹுனுப்பிட்டிய, காந்தி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, எரிவாயு அடுப்பில் பொருத்தப்பட்ட புதிய சிலிண்டரினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வீட்டார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தீயினால் வீடு கடுமையாக சேதமடைந்தது. தீயணைப்புத் துறையின் மூன்று வாகனங்கள் வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்த போதிலும் தீயினால் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் தீ ஏற்பட்டதற்கான காரணம் எரிவாயு கசிவா அல்லது மின் கசிவா என விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பகுதிகளில் எரிவாயு தொடர்பான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.