கொழும்பு வெடிப்புச் சம்பவம்; காரணத்தை வெளியிட்ட பொலிஸார்
கொழும்பில் இன்று அதிகாலை உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து வாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வெடிப்பு சம்பவமானது வெடிமருந்துகளின் விளைவுகள் அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச துரித உணவு உரிமையாளருக்கு சொந்தமான உணவகத்திலேயே இச் சம்பவம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உணவகத்தில் இருந்த எல்பி எரிவாயு குழாய் வெடித்து, தொழிற்சாலை குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உயர் வெப்பநிலை உபகரணங்களுடன் தொடர்பு கொண்டதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக அரசாங்க ஆய்வாளர் தீர்மானித்தார்.
கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொலிசார் விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
இதேவேளை வெடிவிபத்தில் அருகில் டாக்ஸிக்காக காத்திருந்த இரண்டு இளைஞர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
அதிகாலையில் பரபரப்பான கொழும்பு ; கட்டிடமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம்!