கொழும்பு - பதுளை சிறப்பு ரயில்கள் சேவை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக, மலையக ரயில் தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் சில இரவு நேர ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
[NISCIZK ]
இதன்படி, கொழும்பு மற்றும் பதுளை, பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் இயங்கும் இரவு நேர சிறப்பு ரயில்கள் இன்றும் (26-05-2024) இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று கணேவத்தையில் இருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த ரயில் வலக்கும்புர பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையினால் குறித்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 4 ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.