முற்றாக முடங்கிய யாழ் குடாநாட்டின் கரையோர பகுதிகள்!
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ்.மாநகரிலும் ஆதரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை புதிதாக மாதகலின் கரையோர பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
வீதியின் குறுக்கே படகுகளை நிறுத்தி போக்குவரத்தை முடற்றாக முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடமராட்சியிலிருந்து பொன்னாலை வரை நீடிக்கப்பட்ட போராட்டத்திற்கு பொது மக்கள் பேராதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக இந்த போராட்டத்திற்கு யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதி மக்கள் மட்டுமல்லாமல், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களும் தங்கள் பேராதரவை வழங்கியிருக்கின்றனர்.


