இலங்கை முஸ்லிம் மக்களுடன் கூட்டமைப்பினர் கனடாவில் சந்திப்பு
கனடாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் நேற்றைய தினம் 10க்கும் அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இலங்கை பிரச்சனை தொடர்பில் உரையாடினார். அதன் பின் இலங்கையை சேர்ந்த முஸ்லிம் மக்களை சந்தித்தும் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின்போது இலங்கை மக்களின் அரசியல் தீர்வு வடக்கு கிழக்கில் தமிழ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மேலும் சட்ட விரோத காணி அபகரிப்பு ஆகியவை தொடர்பிலும் உரையாற்றப்பட்டது.