நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் ; அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற தீர்மானம்
2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலக்கரி கொள்வனவுகள் குறித்தும் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அரச அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெறத் தீர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க தலைமையிலான இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, நிலக்கரி கொள்வனவு செயன்முறைகளில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அதன்படி எரிசக்தி அமைச்சு மற்றும் லங்கா நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் பி.வி. பந்துலசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்தும் திரட்டுவதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் கொழும்பு 12, அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.