மதுரை மீனாட்சி அம்மனை தரிச்சிக்க செல்லும் முதலமைச்சர் விஜய்!
எதிர்வரும் திங்கட்கிழமை மதுரைக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந் நிலையில் மதுரையில் முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சரான பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக மதுரைக்கு வருவதால், வானூர்தி நிலையத்தில் இருந்து அரச ராஜாஜி மருத்துவமனை வரை பாதுகாப்பு குறித்து, காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனிடையே முதலமைச்சரை வரவேற்கும் வகையில் ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன.
]
மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வீதிகள் சீரமைக்கப்படும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் மகா குடமுழுக்கு விழா கடந்த 17 ஆம் திகதி மிக விமரிசையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.