கொழும்பில் க்ளப் வசந்த கொலை விவகாரம்... கைதான 12 பேருக்கு நேர்ந்த கதி!
அத்துருகிரயவில் துப்பாக்கியால் சூட்டு க்ளப் வசந்த எனப்படும் சுரேந்ர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மேலும் விளக்கமறியல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைதான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் (02-09-2024) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.