கொழும்பு துறைமுக நகரில் சீனர்கள் அடிதடி!
கொழும்பு துறைமுக நகர் பகுதியில் சீனவை சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த சீன நாட்டவர் ஒருவர், எதிர்தரப்பினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த சீன நாட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைதவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு கருவி ஒன்றைக் பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.
இந்த மோதலின் போது காயமடைந்த மற்றொரு சீன நாட்டவரையும் எதிர் குழுவினர் அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.