லங்கா ஐ.ஓ.சி விலை அதிகரிப்பை தொடர்ந்து சிபெட்கோ வெளியிட்ட அறிவிப்பு!
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அனைத்து வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இந்த வருடம் மட்டும் நான்கு தடவைகள் லங்கா ஐ. ஓ சி நிறுவனம் விலை உயர்வு செய்துள்ளது. இந்த நிலையில் சிபெட்கோ எரிபொருள் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"அது எங்களுக்கு ஒரு பிரச்சினை, நாங்கள் இறுதியாக ஐஓசியின் அதிகரிப்பை பார்க்கி றோம். எனவே நான் செயலாளரிடம் ஒப்பந்தத்தை சரிபார்த்து, அதில் எவ்வளவு செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதைப் பார்க்கச் சொன்னேன்.
அதன்படி, திங்கட்கிழமை அமைச்சரவையில் பத்திரத்தை திறந்து தேவையான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்த அவர், தற்போது சிபெட்கோ எண்ணெய் விலை அதிகரிக்கப்படாது எனவும் கூறினார்.