திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்

Jaffna Sri Lanka Politician NPP Government
By Sulokshi Oct 07, 2026 12:38 PM GMT
Report

தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தை அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் இன்றைய அமர்வில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், திலீபனின் நினைவேந்தல் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

திலீபனின் நினைவேந்தலுக்கு தமது கட்சி ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், தியாகத்தின் மீதான மரியாதையின் அடிப்படையில் தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

திலீபனின் சிலையை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கும் தமது தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட கபிலன், எனினும் மாநகர சபையின் நடைமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

உணர்வுபூர்வமான இவ்வாறான விடயங்களில் உரிய கால அவகாசத்துடன் பிரேரணையை முன்வைத்து, சட்ட ஆலோசனைகளைப் பெற்று அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி ஒருமித்த முடிவை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், திலீபனின் நினைவு மற்றும் சிலை தொடர்பான விடயத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதைத் தவிர்த்து, சட்டவிரோதம் அல்லது அநீதி இடம்பெற்றதாக கருதப்பட்டால் உரிய சட்ட நடைமுறைகளை நாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

திலீபனின் தியாகத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல், அவரது நினைவை மதிக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்துள்ளார்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US