டக்ளஸின் யாழ். அலுவலகத்தில் சி.ஐ.டியினர்!பல மணி நேரம் தீவிர தேடுதல்
யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (19) பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல மணி நேரம் நீடித்த தேடுதல்
இதன்போது, யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள அலுவலகம் மற்றும் அதன் வளாகம் முழுவதும் அதிகாரிகளால் விரிவாகச் சோதனையிடப்பட்டது.
பல மணி நேரம் நீடித்த தேடுதல் நடவடிக்கையின் நிறைவில், டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில், கட்சியின் அலுவலக நிர்வாகப் பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.