பிறந்தவுடன்'கூல் போஸ் '; இணையத்தில் வைரலாகும் சிசு!
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று, வைத்தியர்களின் பரிசோதனையின்போது பெரியவர்கள் போல 'கூல் போஸ்' கொடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கெய்ரோ வைத்தியசாலையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு, குழந்தை நலவைத்தியர்கள் வழக்கமான ஸ்டெதாஸ்கோப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது வைத்தியப் படுக்கையில் படுத்திருந்த அக்குழந்தை, எந்தவிதப் பதற்றமும் அல்லது பயமும் இன்றி, தனது இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் முட்டுக் கொடுத்துக் கொண்டு, கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகப்போட்டவாறு மிகவும் இயல்பாகவும் 'கூல்' ஆகவும் படுத்திருந்தது.
இந்த வினோதமான மற்றும் நெகிழ்ச்சியான காட்சியைக்கண்டு ஆச்சரியமடைந்த அங்கிருந்த குழந்தை நலவைத்தியர், அதனை வீடியோவாகப் பதிவு செய்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி உலகளவில் வைரலாகி வருகின்றது.