தமிழர் பகுதியில் வீடு என்ற பெயரில் கட்டப்பட்டும் தேவாலயம்: சட்டத்தை ஏமாற்றும் சபைகள்
வடக்கு கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரைகளுக்கு மாத்திரம் அல்ல சட்டத்தை ஏமாற்றி கட்டப்படும் மதமாற்ற தேவாலயங்களுக்கு எதிராகவும் தமிழர்கள் போராடவே வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சியை சேர்ந்த சுப்ரமணிய பிரபா என்பவர் முகநூலில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.
வரலாற்று தொன்மைமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய பின் வீதிக்கு எதிரே வீடு என்ற பெயரில் அனுமதி எடுக்கப்பட்டு மதமாற்ற கிறித்தவ சபையொன்றின் தேவாலயம் அமைக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்துக் கடவுள்களை சாத்தான்கள் எனக்கூறும் குறித்த சபையினர் இந்து ஆலய சூழலுக்கு அருகில் சட்டத்தை ஏமாற்றி சபை அமைத்து மதமாற்றத்தையும் மதங்களுக்கிடையே பிணக்குகளை தோற்றுவிக்கவும் திரைமறைவில் சதி செய்தமை வெளிப்பட்டிருக்கிறது.
பிரதேச சபையில் அனுமதிக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது கட்டிடத்தின் வரைபடமும் சமர்ப்பிக்கப்படவேண்டியது கட்டாயமாகும் வீட்டிற்குறிய தன்மைகள் அற்ற ஒரு கட்டிடத்தை வீடாக கருதி அனுமதி வழங்கிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் குறித்த சட்டவிரோத செயலுக்கு மறைமுகமாக துணைபோகின்றனரா?
குறித்த விடயம் சிவசேனை மற்றும் உருத்திரசேனை அமைப்புக்களால் பிரதேச சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோது அங்கே வீடு அமைக்கவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதஸ்தலம் அமைக்க அல்ல என கூறப்பட்டதோடு அதிலே மதத்தலம் இயங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளனர் எனினும் வீடென்ற பெயரில் அனுமதி எடுத்து வீட்டின் பண்புகள் எதுவுமற்ற ஒரு கட்டிடம் கட்டி முடிக்கும் வரைக்கும் பிரதேச சபையினர் தூக்கத்தில் இருந்தனரா? அல்லது தூக்கம் போல் நடிக்கவைக்கப்பட்டனரா?
இன மத மொழி கலாச்சார விழுமியங்களுக்கு ஊறு விளைவிக்கும் இவ்வாறான திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடும் கிறுத்தவ சபைகள் மற்றும் அவற்றின் பின்னணி பற்றி தமிழர்கள் அவதானமாக இருக்கவேண்டும் மேற்குலகின் நவீன காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களாக இப்போது மதமாற்ற சபைகள் பரிணமித்துள்ளன.
உள்ளூர் அரசியல் தொடக்கம் நாடாளுமன்ற அதிகாரம் வரைக்கும் அவர்களின் தலையீடுகள் வியாபித்து நிற்கிறது.
இவ்விடயத்தில் தமிழ் மக்கள் அவதானமாக இல்லாது போயின் இப்போது கட்டியிருக்கும் தேவாலயமும் நிரந்தரமாக உருவப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
