நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இரு இளைஞர்கள்; ஒருவர் பலி ..ஒருவர் மாயம்
கிதுல்கலாவின் மஹபாகே (Mahabage) பகுதியில் அமைந்துள்ள மன்னாக்கேதி எல்ல (Mannakethi Ella) நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள், பலமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக கிதுல்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் கடந்த 23-ஆம் திகதி பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்த அவ்விரு இளைஞர்களும் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர்.

ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்கள்
கம்பொல, குருந்துவத்தையைச் சேர்ந்த 20 வயதான ஹசித இமாஷ் மற்றும் அம்பகமுவ, உடபுலத்கமவைச் சேர்ந்த 21 வயதான திமுத்து தரங்க குணரத்ன ஆகியோரே இவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று பிற்பகல், நீர்வீழ்ச்சிக்குக் கீழே உள்ள பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸாரும் அப்பகுதி மக்களும் மீட்டனர்.
அந்தச் சடலம் தற்போது கிதுல்கல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போன மற்றைய இளைஞரைத் தேடும் பணியில் கிதுல்கல பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.