392 மில்லியன் திட்டத்திலிருந்து சீனா வெளியேற்றம்! எச்சரிக்கும் சஜித் பிரேமதாச
கொழும்புத் துறைமுகத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக மற்றும் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனாவின் China Merchants Port Holdings நிறுவனம் விலகியுள்ளமை மிகவும் பேரழிவு தரும் காட்சியொன்றைச் சித்தரித்துக் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) பெருமளவில் வெளியேறும் சூழ்நிலையில், வெறும் பார்வையாளர்களாக இருப்பதை விட, தாம் குறிப்பிடத்தக்க அளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக் கொள்ள வேண்டுமல்லவா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும்
உலகளாவிய சேவை மையத்தை (HSBC Global Service Centre ) இலங்கையிலிருந்து வெளியேறி, பிலிப்பைன்ஸுக்கு எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது என்றும், இதன் விளைவாக 3,000 நேரடி தொழில் வாய்ப்புகளும், 500 மறைமுக தொழில் வாய்ப்புகளும் இழக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வெளியேற்றம் 2027 டிசம்பருக்குள் முழுமையடைய உள்ளதாகவும் தனக்குத் தெரியவந்துள்ளது.
இது உண்மையான சூழ்நிலையாக அமைந்து காணப்படக் கூடாது என்பதே தனது கூடிய எதிர்பார்ப்பாகும், ஏனெனில், அவ்வாறான நிலை ஏற்படுவது நமது தாய்நாட்டுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.