கொழும்பில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் (Wang Yi) இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் எதிர்வரும் 2022 ஜனவரி 8ஆம் திகதியும் 9ஆம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த விஜயத்தின்போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை புத்தாண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணத்தின் கடைசி இடமாக கொழும்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
??State Councilor and Foreign Minister Wang Yi will pay an official visit to #SriLanka from January 8 to 9, 2022 and launch the celebration of the 65th Anniversary of China-Sri Lanka diplomatic relations.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) December 30, 2021
Colombo will be the last stop of his first foreign visit in the new year. pic.twitter.com/ZJVZJMG24L