போரில் கொல்லப்பட்ட ஈரான் மாணவர்களுக்கு சீனா நிதியுதவி! தொடர்ந்தும் ஈரானுக்கு ஆதரவு
அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரானிலுள்ள பாடசாலை மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபா 1.84 கோடி நிதியுதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 150 இற்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்ததோடு, 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சீனா தொடர்ந்தும் ஈரானுக்கு ஆதரவு
இதுதொடர்பில், பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இங் தெரிவிக்கையில்,
“ஈரான் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததற்கு சீனா ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
இத் தாக்குதலுக்கு ஈரான் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சீன செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து ரூபா 1.84 கோடி நிவாரணமாக வழங்கப்படுகிறது.
மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் ஈரான் மக்களின் சிரமங்களைப் போக்கும் விதமாக சீனா தொடர்ந்து தனது ஆதரவை ஈரானுக்கு வழங்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.