குழந்தை உயிரிழந்த விவகாரம்; விசாரணைகள் தீவிரம்
பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனையில் இரண்டரை வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
கடந்த 25ம் திகதி பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனையில் மயக்கமருந்து கொடுக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.
மயக்கமருந்தால் கர்ப்பிணி உட்பட இருவர் பலி
இந்நிலையில் அக் குழந்தைக்கு வழங்கப்பட்ட மயக்கமருந்து தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறுகின்றன . அதேசமயம் விசாரணைகள் இடம்பெறுவதை உறுதி செய்துள்ள அதிகாரியொருவர் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
குழந்தைக்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட மருந்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையிலேயே வழங்கப்பட்டதாக மற்றுமொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை பேராதனை மருத்துவமனையில் மயக்கமருந்து காரணமாக கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.