மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா ; மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.

சிக்கன்குனியாவின் முதன்மை நோய் பரப்பி
இலங்கையில் தற்போது நிலவும் தொடர்ச்சியான மழையின் காரணமாக டெங்குவிற்கான பருவமாக உள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையில் மாத்தறை பகுதியில் சிக்கன்குனியா வேகமாக பரவி வருகிறது.
இந் நோய் பரவல் முன்னர் நாரஹேன்பிட்டி மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் பதிவாகியிருந்த நிலையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் கடந்த சில மாதங்களாக மாத்தறையில் இந் நோய் பரவி வருகின்றது.
இச் சூழ்நிலையில் நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. சிக்கன்குனியாவின் முதன்மை நோய் பரப்பி டெங்கு நுளம்பைப் போன்ற ஒரு நுளம்பினமாகும் என அறிவுறுத்தியுள்ளார்.